• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). லாரி டிரைவரான இவர், சின்னகண்ணுபுரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்று விட்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்த ஆனந்த் மகன் மணிகண்டன் (30) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

  • Share on

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : அமலாக்கதுறை மனுவிற்கு நாளை உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட மக்களே... உங்களுக்கு ரேஷன்கார்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா?

  • Share on