அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரிய அமலாக்கதுறை மனு மீதான விசாரணை நாளை ( செப்.,11 ) நடைபெற உள்ள நிலையில், மனு மீதான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2001-2006 இல் அதிமுக ஆட்சியின்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தாா். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சோ்த்ததாக கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரா்கள் உள்பட 7 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், தங்களையும் ஒரு மனுதாரராகச் சோ்க்கக் கோரி அமலாக்கத் துறையினா் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா். இதனிடையே, வழக்கு விசாரணை 80 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அமலாக்கத் துறையை சோ்க்க முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரிய அமலாக்கதுறை மனு மீதான விசாரணை நாளை ( செப்.,11 ) நடைபெற உள்ள நிலையில், மனு மீதான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.