Kதூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் என்று ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. ஆகியோர் கடந்த ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்தனர். இந்நிலையில், அண்ணா பழைய பேருந்து நிலையத்தினை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக திருநெல்வேலி, திருச்செந்தூருக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மினி பஸ்கள் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.