விளாத்திகுளம் அருகே அ.வேலாயுதபுரம் கிராமத்திற்கு செல்லக்கூடிய தார்சாலையானது சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அதில் செல்லமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, கே.குமரெட்டியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அ.வேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கீழ ஈராலுக்கு செல்லக்கூடிய தார் சாலையானது, சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதோடு, மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பலர் தவறி விழும் நிலைக்கு ஆளாவதோடு, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத சூழலும் உருவாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் பிரதிநிதிகளும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.