தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக வேதாந்த குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, பிரத்யேகமாக இரண்டு தேதிகளை ஒதுக்கும்படி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2012 மே 22-ல் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது
இந்த நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், கழிவுகளை அகற்றவும் அனுமதி கேட்டு வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு சில உத்தரவுகளை பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், ஜிப்சம் கழிவுகளை அகற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரம் ஆலையில் உள்ள கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக விரைந்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் விரைந்து முடிவெடுக்கும்படி பிறந்த குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு பிரத்தேகமாக இரண்டு தேதிகளை ஒதுக்கும்படி நீதிமன்ற பதிவாளருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.