• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு வந்த பயிர் காப்பீடு பணம் எவ்வளவு? உடனடியாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

  • Share on

விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள பயிர் காப்பீட்டுத் தொகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு எவ்வளவு தொகை வந்துள்ளது என்கின்ற விபரத்தை மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் வந்த விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக பயிர் காப்பீடு சரியான முறையில் வழங்கப்படவில்லை. மழை இல்லாமல் பல இடங்களில் பயிர்கள் கருகிவிட்டது. அறுவடை கணக்கை எடுப்பதில் பலமுறை கேடுகள் நடப்பதாக கிராம மக்கள் குறை கூறி வருகின்றனர். பயிர் காப்பீட்டுக்கு தமிழக அரசு 560 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது? எந்தெந்த பயிருக்கு ஒதுக்கப்பட்டது என்று விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே தெரிவித்தால் இதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லாமல் போகும்.

தாலுகா வாரியாக பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்து உடனடியாக வெளியிட வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி அருகே 58 பவுன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் - நாடகமாடிய மருமகள் அதிரடி கைது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • Share on