• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே 58 பவுன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் - நாடகமாடிய மருமகள் அதிரடி கைது!

  • Share on

தூத்துக்குடி அருகே மாமியார், மருமகளை அறையில் பூட்டி 58 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் திடீர் திருப்பமாக மருமகள் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே அன்னை தெரசாநகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ் என்ற குட்டி (62) பேன்ஸி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வராணி (60). மகன் தங்கதுரை (38), அவரது மனைவி அஸ்வினி (35). பேரன் அஸ்வந்த். தங்கதுரையும், அஸ்வினியும் வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வருகின்றனர். 

காந்தி ஜெயந்தியையொட்டி 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் அஸ்வினியை அழைத்துக்கொண்டு தங்கதுரை தூத்துக்குடிக்கு வந்தார். மனைவி அஸ்வினியை வீட்டில் விட்டு விட்டு அடுத்த வாரம் வந்து அழைத்துச் செல்வதாக கூறினார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி அற்புதராஜ் பேன்ஸி கடைக்கு சென்ற நேரத்தில் மாமியார் செல்வராணி, மருமகள் அஸ்வினி, பேரன் அஸ்வந்த் இருந்தனர். அப்போது 'பர்தா' அணிந்த மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து, 3 பேரையும் கத்தியைக்காட்டி மிரட்டி அருகில் இருந்த அறைக்குள் தள்ளி பூட்டி விட்டு பின்னர் அவர்கள் கழுத்தில் கிடந்த நகைகளை யும், பீரோவையும் திறந்து அதிலிருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு தப்பியோடினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட் டது. விசாரணையில் மாமியார் செல்வராணி மற்றும் பேரன் அஸ்வந்த் கொடுத்த தகவல் ஒரே மாதிரியாகவும் ஆனால் மருமகள் அஸ்வினி கூறிய தகவல் முன்னுக்குப்பின் முரணாகவும் இருந்தது.

மேலும் அஸ்வினியின் செல்போனில் இருந்த கால் ஹிஸ்ட்ரி முழுவதும் டெலிட் செய்யப்பட்டிருந்தது போலீசாருக்கு சந் தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தபோது மாமியார் செல்வராணி, பேரன் அஸ்வந்த் கூறிய தகவல்கள் உண்மையாகவும் மருமகள் அஸ்வினி கூறிய தகவல் உண்மைக்கு புறம்பாகவும் இருந்தது.

இதனையடுத்து அஸ்வினியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அஸ்வினி தனது அக்காவுடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

 அஸ்வினி சென்னையில் இருந்த போது ஆன்லைன் டிரேடிங் செய்து பணத்தை இழந்துள்ளார். இதனை சமாளிப்பதற்காக தன்னுடைய 30 பவுன் நகையை அடகு வைத்து அதனையும் மீட்க முடியாமல் இழந்துள்ளார். இதுகுறித்து கணவர் கேட்ட போதெல்லாம் ஏதாவது கூறி சமாளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அஸ்வினி தனது அக்காவிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் திட்டமிட்டு அஸ்வினியின் மாமியார் நகையை கொள்ளை அடிப்பது என்று தீர்மானித்துள்ளனர். ஏற்கனவே திட்டமிட்டபடி சம்பவத்தன்று அஸ்வினியின் அக்கா சுசீலா, பர்தா அணிந்து வந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதும் இதற்கு அஸ்வினி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அஸ்வினியை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அவரது அக்கா சுசிலாவை தேடி வருகின்றனர்.

  • Share on

இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு!

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு வந்த பயிர் காப்பீடு பணம் எவ்வளவு? உடனடியாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

  • Share on