• vilasalnews@gmail.com

இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு!

  • Share on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி, டெராடூன் - ஜூலை 2024 சேர்க்கைக்கான தகுதித் தேர்வுக்கு 01.07.2024 அன்று 11½ வயது நிரம்பியவரும், 13 வயது அடையாதவரும் விண்ணப்பிக்கலாம். 

02.07.2011-க்கு பின்னதாகவும், 01-01-2013-க்கு முன்னதாகவும் பிறந்த 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் மட்டும் தகுதியுடையவராவார்கள். தகுதித் தேர்வு 2023 டிசம்பர் 02-ம் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பத்தினை  ‘கமாண்டண்ட், இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட், தபால் எண் - 248003 ’ என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டை பிரதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்திற்கு 15.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.rimc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை : பேராசிரியர்களை கைது செய்ய நாம் தமிழர் கட்சி கோரிக்கை!

தூத்துக்குடி அருகே 58 பவுன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் - நாடகமாடிய மருமகள் அதிரடி கைது!

  • Share on