• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டம் : மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில்ராஜ் இன்று (16.1.2021 ) துவக்கி வைத்து ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி. செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

கோவியட்  19 தொற்று, கடந்த 2020 ம் ஆண்டு பொங்கல் முடிந்தவுடன் உலகம் முழுவதும் பரவி உலகையே அச்சுறுத்தி வந்தது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தற்போது படிப்படியாக குறைந்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதற்கு முக்கியமான காரணம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து அதன் மூலம் கட்டுப்படுத்தப் பட்டது. ஆனாலும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில்  முதலமைச்சர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் கொரனோ தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

நமது மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக, சுகாதாரத்துறையினர் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகிய பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார  நிலைய மையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுகாதாரத்துறை அல்லாத மற்ற அரசுத்துறை சார்ந்த காவலர்கள், வருவாய்த்துறை, அதிகாரிகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

கொரோனா தடுப்பு ஊசி மிகவும் பாதுகாப்பானது. தடுப்பூசியானது விஞ்ஞானி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இரு முறை பயன்படுத்தப்படும். முதற்கட்டமாக 5 எம்எல் போடப்படும், பின்பு 28 நாட்கள் கழித்து அதே நபருக்கு அதே மையத்தில் அடுத்த தடுப்பு ஊசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் முருகையா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ( கோவில்பட்டி ) மருத்துவர் கீதா, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் பொன் ரவி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி தனப் பிரியா மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரில் வாழைக்கன்று நட்டு வைத்து பாஜக இளைஞர் அணி நூதன போராட்டம்!

மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்க சிறப்பு முகாம்

  • Share on