தூத்துக்குடியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பண்டாரம்பட்டியில் இன்று கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்து, சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் 3 நபர்களுக்கும் மற்றும் சிறந்த கிடேரி கன்றுகள் வளர்த்தோர்களுக்கான பரிசுகள் 3 நபர்களும் வழங்கி பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) எஸ். சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் (கால்நடை பராமரிப்பு) சங்கரநாராயணன், ஜான் சுபாஷ், கால்நடை வளர்ப்போர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.