தூத்துக்குடியில் லாரி டிரைவரின் செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் ஆதி கிருஷ்ணன் மகன் மணிராஜ் (30) லாரி டிரைவர். இவர் தனது லாரியை தூத்துக்குடி ஜோதி நகரில் உள்ள ரோட்டில் நிறுத்தி வைத்துவிட்டு அருகிலுள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது, லாரியில் பெட்டிக்குள் இருந்த ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காணவில்லையாம்.
இதுகுறித்து மணிராஜ் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், எப்போதும் வென்றான் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் சத்தியமூர்த்தி (29) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.