எட்டயபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தலைமையில், எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி மாமன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுச்சாமி, எட்டயபுரம் வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, சின்னத்துரை, சிவா, ஜெயகுமார், மனோகரன், கன்னியப்பன், சீனா என்ற முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, மோகன், கார்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.