• vilasalnews@gmail.com

வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு துணை இராணுவப்படை வீராங்கனைகள் மரியாதை!

  • Share on

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு இந்திய துணை இராணுவப்படை வீராங்கனைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இந்திய துணை இராணுவப்படை வீராங்கனைகள் 140 பேர் கன்னியாகுமரியில் இருந்து குஜராத்திற்கு மோட்டார் சைக்கிளில் பெண்களை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற விழிப்புணர்வு பேரணியாக செல்கின்றனர்.  இவர்கள்  குஜராத் செல்லும் வழியில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தூக்கிலிடப்பட்ட இடத்திலும், அங்கு அவருக்கு கட்டப்பட்ட மணிமண்டபத்தில் உள்ள 7 அடி உயர வீரபாண்டிய கட்டபொம்மனின் வெங்கல சிலைக்கு வீராங்கனைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியின் போது, அவர்களை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை  மாலை அணிவித்து பொண்ணாடை போர்த்தி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் ராஜதுரை, வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்  உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், நயினார் பாண்டியன், ஆதிலட்சுமிஅந்தோணி, தேவிகண்ணன் முன்னாள் கவுன்சிலர்கள் சேக்தாவூது சந்தானம் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் மீண்டும் பேரணியை தொடங்கினர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படையின் துணை இராணுவ பெண் கமாண்டோக்கள் 140 பேர் கொண்ட குழுவினர் 60 மோட்டார் சைக்கிள்களில் துணை கமாண்டர் என்.சரவணண் மேற்பார்வையில் இந்திய மத்திய பாதுகாப்பு படையின் துணை இராணுவ மகளிர் பிரிவு கமாண்டர் சிந்து தலைமையில் பேரணியாக செல்கின்றனர்.

  • Share on

பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய பாஜக... கிழித்தெறிந்த திமுகவினர் - பரபரக்கும் தூத்துக்குடி!

தூத்துக்குடி பிரஸ் கிளப் பொது குழு கூட்டம்!

  • Share on