
தூத்துக்குடியில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் படத்தை, திமுகவினர் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த அண்ணா பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 57 கோடியில் நான்கு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தை நாளை அக்டோபர் 8 ஆம் தேதி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார்.
பேருந்து நிலைய வளாகத்தில் நாளை திறப்பு விழா பணிகள் மும்மரமாக நடந்து வர, அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டினர். இதனையடுத்து சில மணி நேரங்களிலேயே பாஜகவினரால் ஒட்டப்பட்ட பிரதமர் மோடியின் படத்தை திமுகவினர் கிழித்து எறிந்தனர். இதனால் தூத்துக்குடியில் திமுக - பாஜகவினரிடையே பரபரப்பான சூழல் காணப்படுகிறது.