சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் முத்துக்குமார் என்ற முத்தையா (வயது 33). தொழிலாளி. இவருக்கும், அதே ஊர் மேலத்தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் இசக்கிபாண்டி (34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததுள்ளதாம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் வீட்டுக்கு இசக்கிபாண்டி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த நாற்காலிகள், பிரிட்ஜ், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து முத்துக்குமார் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் முத்து வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டியை நேற்று கைது செய்தார்.