தூத்துக்குடியில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் 13ம் தேதி திறக்கப்படுகிறது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவில் ரூ.77.87. இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டப கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது "தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த கோமான் குரூஸ் பர்னாந்தீஸ். அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றும் விதமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 13-ஆம் தேதி காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இங்கு உள்ள குரூஸ்பர்னாந்தீஸ் சிலையை இரண்டு அடி உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில நிர்வாகி ப்ளோரன்ஸ் மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ்,மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின் மாநகர மருத்துவ அணி தலைவர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்