• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் திறப்பு

  • Share on

கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட எட்டயபுரம் சாலை புதுரோடு விலக்கு போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா, தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்து சிக்னலை திறந்து வைத்து பார்வையிட்டார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார். தொழிலதிபர் அபிராமி முருகன், ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் சந்திரசேகர், காவல் ஆய்வாளர் பத்மாவதி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமார், உதவி ஆய்வாளர்கள் தர்மராஜ், ரவீந்திரன், அங்குத்தாய், சத்யா, ஆரோக்கிய ஜென்ஸி, தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஆற்றங்கரை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் - மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் 13ம் தேதி திறப்பு

  • Share on