விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி செயலாளர் வேலுச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியசாமி, சுமதி இம்மானுவேல், கிளைச் செயலாளர்கள் வேல்முருகன், சிங்கராஜ், செந்தூர்பாண்டி, வேலுச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.