• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஆண் மற்றும் பெண்களுக்கான ஓட்டப் போட்டி - 7ஆம் தேதி நடக்கிறது

  • Share on

தூத்துக்குடியில் வருகிற 7ஆம் தேதி ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலருக்குமான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி 07.10.2023 அன்று காலை 6.00 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. 

போட்டிக்கான விதிமுறைகள்  அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பவர்கள் 05.10.2023 மற்றும் 06.10.2023 ஆகிய நாட்கள் தங்களது வயதுச் சான்றிதழுடன் பெயரை மாவட்ட விளையாட்டரங்கத்தில் அலுவலக நேரத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் 07.10.2023 அன்று காலை 6 மணிக்கு முன்னர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேரில் ஆஜராக வேண்டும். 

நெடுந்தூர ஓட்டப் போட்டியானது மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடையும். போட்டியின் போது நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5ஆயிரமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.3ஆயிரமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2ஆயிரமும்,  நான்காமிடம் முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.ஆயிரமும், பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்  வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  தெரிவித்துள்ளார். 

  • Share on

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் கத்திமுனையில் 62 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை!

ஆற்றங்கரை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் - மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

  • Share on