தூத்துக்குடி அருகே தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் முனியசாமி (36) மற்றும் முத்தையாபுரம் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் மகன் மாரிமுத்து (34) ஆகியோர் கடந்த 01.10.2023 அன்று முத்தையாபுரம் ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இவர்களது உறவினரான தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமணி (எ) ஸ்டீல் மணி (33) என்பவர் மேற்படி முனியசாமி மற்றும் மாரிமுத்து ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுடலைமணி (எ) ஸ்டீல் மணி, முனியசாமி மற்றும் மாரிமுத்து ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேற்படி முனியசாமி அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் வழக்குபதிவு செய்து சுடலைமணி (எ) ஸ்டீல் மணியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சுடலைமணி (எ) ஸ்டீல் மணி மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 6 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ஏரல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.