• vilasalnews@gmail.com

எட்டையபுரம் பேரூராட்சியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை - மார்கண்டேயன் எம்எல்ஏ பணியை தொடங்கி வைத்தார்

  • Share on

எட்டையபுரம் பேரூராட்சி 3-வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம்சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கோவில்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி செயலாளர் பாரதிகணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், பாரதியார் நூற்பாலை முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, வார்டு  உறுப்பினர் மைக்கேல்ராஜ், தங்கம்மாள், ராமர், மணிகண்டன், வார்டு செயலாளர்கள் சின்னப்பர், பட்சிராஜன், அருள்சுந்தர் பேரூராட்சி  துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துமுனியசாமி, தலைமை கழக பேச்சாளர்கள், தமிழ்பிரியன், ஆனந்த், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் மனைவி, குழந்தை கொலை - ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி அருகே தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

  • Share on