• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மனைவி, குழந்தை கொலை - ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

  • Share on

தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவி குழந்தைகளை கொலை செய்தவருக்கு கிழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.

தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் வசித்து வந்த சங்கர் ( 38 ) பலசரக்கு கடை நடத்தினார். இவரது மனைவி நாகர்கோவிலை சேர்ந்த கோகிலா ( 27 ) இவர் அடிக்கடி மொபைல் போனில் பேசினார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த சங்கர் தகராறில் ஈடுபட்டார்.

சங்கர் 2014 மே 29 ல் மனைவியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டார். மனைவியின் அலைபேசி பிஸியாக இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்து வீட்டிற்கு வந்த சங்கர் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், கிரைண்டர் கல்லை கோகிலா தலையில் போட்டு கொலை செய்தார். அப்போது அழுது கொண்டிருந்த 3, 5 வயது மகளை சுவற்றில் அடித்து கொலை செய்தார். காஸ் இணைப்பு திறந்து சங்கர் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் சத்தம் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கரை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்தனர்.

அவருக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் 2020 ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சங்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எம் நிர்மல் குமார் அமர்வு, மனுதாரர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து இம்மனுவை தள்ளுபடி செய்து செய்கிறோம் என உத்தரவிட்டனர்.

  • Share on

சாலையோர வாய்கால் பள்ளத்தில் கார் விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்

எட்டையபுரம் பேரூராட்சியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை - மார்கண்டேயன் எம்எல்ஏ பணியை தொடங்கி வைத்தார்

  • Share on