• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிக்கு நவீன தையல் இயந்திரம் - வழக்கறிஞர் ஜோயல் வழங்கினார்!

  • Share on

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில், திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கு நவீன தையல் இயந்திரம் வழங்கினார்.

தூத்துக்குடி சிலுவைப்பட்டி, துரைசிங்கம்நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான ராமகிருஷ்ணன் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரியான வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட ராமகிருஷ்ணன், திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயலை சந்தித்து மனு அளித்துள்ளார்.

ராமகிருஷ்ணனின் மனுவை பெற்று அவருக்கு நவீன தையல் இயந்திரம் வழங்க இளைஞரணி செயலாளர் ஜோயல் ஏற்பாடு செய்தார். இதனையடுத்து முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் ஒருபகுதியாக உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மாற்றுத்திறனாளியான ராமகிருஷ்ணனுக்கு நவீன தையல் இயந்திரத்தை திமுக மாநில இளைஞரணி செயலாளர் ஜோயல் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோ, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன், மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற பொருளாளர் சேக்முகமது, துணை தலைவர் திருச்செந்தூர் சுரேஷ், துணை செயலாளர் காளீஸ்வரன், மாநகர துணை செயலாளர் முகமது ,மாநகர தலைவர் முருகன், ஒட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் பாரி, விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் ரவி, முன்னாள் பகுதி செயலாலாளர் பென்னி, இளைஞரணி நிர்வாகிகள் தனபால், மெல்டஸ், முத்தரசன், ஜான் ஸ்டாலின், இசக்கி, செந்தில், வசந்த், சிவமுருகன், தீபன் , சன்முகபுரம் தீபக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் அரசு விரைவு பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்

தூத்துக்குடியில் அக்.5ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

  • Share on