• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அரசு விரைவு பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்

  • Share on

தூத்துக்குடி போல்டன்புரத்தில் விபத்து ஏற்படுத்திய அரசு விரைவு பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வழியாக பெங்களூருக்கு அரசு விரைவு பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது.  அப்பொழுது தூத்துக்குடி போல்டன்புரம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் பேருந்து மோதியது. இதில்  இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகன் காயமடைந்தனர்.  இதனை அடுத்து அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின், விபத்தை ஏற்படுத்திய அப்பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசம் அடைந்த மக்கள் கலைந்து சென்றனர்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிக்கு நவீன தையல் இயந்திரம் - வழக்கறிஞர் ஜோயல் வழங்கினார்!

  • Share on