• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரிலும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் யாஸ்மின் மேகம் மற்றும் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆகியோரது ஆலோசனைப்படி, எனது ( திருவள்ளுவன் ) தலைமையில் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர் துணை ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், ஹெர்மஸ் மஸ்கரனாஸ் ஆகியோர் தூத்துக்குடி பகுதியிலும், உதவி ஆய்வாளர் சூரியன் கோவில்பட்டியிலும், உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி திருச்செந்தூரிலும், சங்கர கோமதி ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தேசிய விடுமுறை தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல் தொழிலாளர்களை பணியமத்திய முரண்பாட்டிற்காக 33 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 23 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 60 நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

  • Share on

தூத்துக்குடியில் 2 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - மீன்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

தூத்துக்குடியில் அரசு விரைவு பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்

  • Share on