• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 2 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - மீன்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

  • Share on

சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே போன்று தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை அடுத்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் நேற்று இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை இதனால் சுமார் 245 விசைப்படகும் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.  இவ்வாறு தொடர்ச்சியாக விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் இருப்பதால் தூத்துக்குடியில் மீன்கள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் 15 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி : அமைச்சர், மேயர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

  • Share on