• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 15 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி : அமைச்சர், மேயர் பங்கேற்பு

  • Share on

தூத்துக்குடியில் 15 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து  1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 163 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடும் துவக்க விழா   தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் நடைபெற்றது. மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பனை விதைகள் நட்டு துவக்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மாநகரச் செயலாளர் உதயசூரியன், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் மாநகர வார்டு செயலாளர்கள் செந்தூர் பாண்டி செல்வராஜ் வாகைகுளம் ராஜா மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் நிறுவனர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், காமராஜ் கல்லூரி என்சிசி பேராசிரியர் ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

  • Share on

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருத்துவ முகாம்

தூத்துக்குடியில் 2 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - மீன்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

  • Share on