தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி 39 வது வார்டு சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் வடக்கு ராத வீதி டிஏ திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட பொருளாளர் மத்திய அரசு வழக்கறிஞர் எஸ்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
39வது வார்டு தலைவர் உஷா தேவி சண்முகசுந்தரம் குத்து விளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மோகன் ரத்த பரிசோதனை நிலையம் அகர்வால் கண் மருத்துவமனை திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் எம்.பி விக்னேஷ் பாலமுருகன், அரவிந்த் மகளிர் அணி செயலாளர் லதா, மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், கூட்டுறவு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சந்தன குமார், நிர்வாகிகள் காசிராஜன், இசக்கிமுத்து, தங்க மாரியப்பன், பாலசுப் பிரமணியன், விக்னேஷ் பலர் கலந்து கொண்டனர்