தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பனை விதைகள் நடும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில், மாநகராட்சி தலைமை சுகாதார நல அலுவலர் சுமதி, திமுக மாநகர துணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் எடின்டா, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.