• vilasalnews@gmail.com

சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரி சார்பாக தூய்மை பணி

  • Share on

பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இன்று (அக்.1) சாயர்புரம் டாக்டர்.ஜி.யூ. போப் பொறியியல் கல்லூரி சார்பாக சாயர்புரம் பஞ்சாயத்தில் உட்பட்ட பகுதிகளில் தேசிய மாணவர் படை சார்பாக தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பாபு தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தூய்மை பணியை எடுத்துரைத்தார். கல்லூரி முன்னாள் முதல்வர் ஐசக் பாலசிங், கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் கனிசெல்வன், உடற்கல்வி ஆசிரியர் ஜாஸ்பர்,  ஆனந்த்  மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் உதவி பேராசிரியர் டென்னிசன் செய்திருந்தார்.

  • Share on

தருவைக்குளத்தில் பனை விதைகளை நடும் பணி - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பனை விதைகள் நடும் பணி - மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

  • Share on