ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தருவைக்குளம் மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பக பூங்கா அருகில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் பனை விதைகளை நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை நிறுவனர் தாமோதரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சுந்தரராஜன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அலாய் பெர்னாண்டோ, வட்டாட்சியர் சுரேஷ், யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், பணி மேற்பார்வையாளர் பரமசிவன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், பங்குத்தந்தை அருட்தந்தை.அந்தோனி மிச்கேல் வின்சென்ட், ஊராட்சி மன்ற தலைவர்கள் காடோடி, அருண்குமார், இளையராஜா, இளைஞரணி, அனிட்டன்,
தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், கிளை பிரதிநிதி பிரஸ்நேவ் , மகளிரணி அன்னசெல்வம் மற்றும் அரசு அலுவலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.