வேம்பார் கடற்கரையில் பனை விதைகள் நடும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகத் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டமும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வேம்பார் கடற்கரையில் பனை விதைகள் நடும் பணியினை இன்று துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வமணி, சுமதி இம்மானுவேல், செந்தூர்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் பால்பாண்டி,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனா மேரி, ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா, ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் மரியசிங்கம், ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் சிம்மராசி கிளைச் செயலாளர்கள் ராஜபாக்கியம், நல்லமுத்து, சரவணன், கண்ணன், முனியசாமி, அழகர்சாமி, ஆதிநாராயணன், சேவியர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.