தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி, தென்காசி உதவி ஆணையர் கோமதி தலைமையில் நடைபெற்றது.
இதில் 16 நிரந்தர உண்டியல்களில் ரூபாய் 19 லட்சத்து 8 ஆயிரத்து 307ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இது தவிர பொன் 122 கிராம், வெள்ளி 460 கிராம் கிடைத்துள்ளது.
இந்தப் பணியில், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் பகவதி, அயல் பணியாளர் வெங்கடேஸ்வரி, கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் மெய்யூர் சிவந்தி கலைக்கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.