தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியைச் சேர்ந்த இருளாண்டி மகன் ராஜ்குமார் ( 33 ). இவர் தனது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார்.
ராஜ்குமார் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு அவரை காளை மாடு ஒன்று முட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.