• vilasalnews@gmail.com

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வளாகத்தில் காணும் பொங்கல் சுற்றுலா விழா

  • Share on

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் , ஒட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வளாகத்தில் வைத்து " பொங்கல் சுற்றுலா விழா 2021 " கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டை வளாகத்தில் 15.1.2021 இன்று காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு,  பொங்கல் சுற்றுலா விழா 2021  கொண்டாடப்பட்டது.


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள்  உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • Share on

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆட்சியர் ஆய்வு

வேம்பார் ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் தண்ணீரில் மூழ்கி பலி - ஒருவர் உடல் மீட்பு, மற்றொருவர் உடல் தேடும்பணி தீவிரம்

  • Share on