• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், 100 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா மீளவட்டான் பெரியாசாமி திடத்தில் வைத்து நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியார் கலந்து கொண்டு, கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இந்த கிரிக்கெட் போட்டியானது, இன்று ( 30.9.23 ) முதல் 2.10.23 வரை மூன்று தினங்கள் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றிபெரும் அணிகளுக்கு, முதல் பரிசாக ரூபாய் 50,000 மற்றும் கோப்பை, இரண்டாவது பரிசாக ரூபாய் 30,000 மற்றும் கோப்பை, மூன்றாவது பரிசாக ரூபாய் 20,000 மற்றும் கோப்பை, நான்காவது பரிசாக ரூபாய் 10,000 மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.

இந்த போட்டி தொடக்கவிழாவில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நம்பி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வழக்கறிஞர் பாலகுருசாமி, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின் அசோகன், வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஆறுமுகம், மருத்துவர் அணி அருண்குமார், மண்டல தலைவி கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், கீதா முருகேசன், சரவணக்குமார், அந்தோணி மார்ஷிலின், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் குருராஜ், லவராஜா, மாதேஸ்வரன், கணேசன், டினோ,  மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் செல்வகுமார், ராஜா, அன்பழகன், பிரதீப்,  சில்வஸ்டர் சாமுவேல் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் : இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை

தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு உதவும் கரங்கள் காவல் நண்பகள் ரூ.29 லட்சம் நிதியுதவி!

  • Share on