தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா மேம்பால பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவனின் முயற்ச்சியால் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு, உப்பாற்று ஓடை அருகே ரவுண்டானா மேம்பால பகுதியானது இரவு நேரங்களில் வெளிச்சமின்றி இருளில் இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமமாக இருப்பதோடு, பாதுகாப்பாற்ற பயணம் மேற்கொள்ளக்கூடிய சூழலும் இருந்துவந்தது. ஆகவே, பொதுமக்களின் பாதுகாப்பின் நலன் கருதி அப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மின் விளக்குகள் அமைக்குமாறு அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டதன் பேரில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தற்போது அப்பகுதியில் மின்விளக்குகளை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அமைத்து கொடுத்தனர். இதனையடுத்து அவர்களுக்கு தனது சார்பில் அமைச்சர் கீதாஜீவன் நன்றி தெரிவித்தார்.
மேலும், விரைவில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மேற்கொண்டு கூடுதல் மின் விளக்குகள் அப்பகுதியில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.