விளாத்திகுளத்தில் பொதுமக்கள் மயானம் செல்வதற்கு சாலை வசதி வேண்டி தொகுதி எம்எல்ஏவை சந்தித்து காலையில் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு உடனடியாக அன்றைய தினம் நண்பகலிலேயே அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு சிதம்பரநகர் பொதுமக்கள், தங்களது பகுதியில் மயானம் செல்வதற்கு சாலை வசதி வேண்டி இன்றைய தினம் ( செப்., 28 ) காலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்றைய தினமே உடனடியாக மயானம் செல்லும் பாதையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, மயானம் செல்லும் பாதையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தற்காலிக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார்கள்.
அப்போது, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் செல்வகுமார், வார்டு செயலாளர் ராஜதுரை, சிதம்பர நகர் தலைவர் செல்வகுமார், தொமுச கனகவேல்ரத்தினம், மீனவர் அணி முத்துப்பாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.