• vilasalnews@gmail.com

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆட்சியர் ஆய்வு

  • Share on

தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைக்கட்டுகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைக்கு வரும் உபரிநீரை முழுமையாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை  மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகாரிகளிடம் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஏரல் அருகே சிவராம மங்கலம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்புக்குழுவினர் மீட்க உத்தரவிட்டார். தாமிரபரணி ஆத்தூர் ஆற்றுப்பாலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் புன்னக்காயல் பகுதியில் உள்ள வெள்ளை பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனபிரியா,  வட்டாட்சியர் இசக்கி ராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக, மருதூர் அனைக்கட்டுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரான 60 ஆயிரம் கன அடி நீர் தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் தடுப்பணையான மருதூர் அணைக்கட்டு பகுதிக்கு தற்போது வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கரையோரங்களில் 7 இடங்களில் பாதிக்கப்படும் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது போர்க்கால அடிப்படையில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருடன் பேசி தண்ணீர் திறப்பு குறித்து கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  தெரிவித்தார்.

  • Share on

வேம்பார் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான இளைஞர்கள் - சின்னப்பன் எம்எல்ஏ நேரில் ஆய்வு!

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வளாகத்தில் காணும் பொங்கல் சுற்றுலா விழா

  • Share on