• vilasalnews@gmail.com

தமிழகத்தில் வீரியம் காட்டும் டெங்கு காய்ச்சல் - தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிமுக கவுன்சிலர் கோரிக்கை

  • Share on

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடியில் அதனை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரும், மாமன்ற எதிர்கட்சி சொறடாவுமான வழக்கறிஞர் மந்திர மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர்விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பும் டெங்கு பாதிப்பு ஏற்படுகின்றது. தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கூட 17 பேர் டெங்கு பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 100 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறையே தெரிவித்துள்ளது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்கிட மாவட்ட மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் விதமாக, கொசு உற்பத்தியாகும் இடங்களாக கழிநீர் தேங்கிய பகுதிகளும், குப்பைகள், தேவையற்ற பொருள்களும் கானப்படுகிறது. அதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டு பகுதிகளும் குப்பைகளை அள்ள தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் குப்பைகளை அள்ளாமல் கிடப்பதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே சரிவர பணி மேற்கொள்ளாத தனியார் குப்பை அள்ளும் ஒப்பந்தகாரின் ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்து, குப்பைகளை சரியான முறையில் அள்ள மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடிக்கு 29ம் தேதி வருகை தரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை கலைத்து ஆடத்தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி... அடுத்து தூத்துக்குடி தானாம்!

  • Share on