மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற 29ம் தேதி தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற 29ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
அதன்படி 29.9.2023 வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் முன்பிருந்து SEPC நிறுவனம் வரை 'நடப்போம் நலம்பெறுவோம்" எனும் நோக்கில் 8 கி.மீ தூரம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தை ஆய்வு செய்து நடைபயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
காலை 11.00 மணி அளவில் தூத்துக்குடி சங்கர் காலனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடப் பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.4.06 கோடி மதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார்.
எனவே மேலே கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.