தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து, சி.பா.ஆதித்தனாரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ் மற்றும் மாரியப்பன், தெய்வகாளை, மந்திரம், முத்து செல்வம், ஸ்டீபன், அருணா, வினோத், சந்திரன், துரைசாமி, அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.