• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பதுக்கி கடத்தப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

  • Share on

தூத்துக்குடியில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அனுராதா தலைமையில் உதவி ஆய்வாளர் பாரத்லிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜன் மற்றும் போலீசார் தூத்துக்குடி 1-ம் கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் மொத்தம் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தியதாக சீவலப்பேரியை சேர்ந்த இசக்கிபாண்டி  (30), மகராஜன் (27), ஸ்ரீவைகுண்டம் விட்டிலாபுரத்தை சேர்ந்த கண்ணன் என்ற மணிகண்டன் (33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

  • Share on

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் 2 குடிநீர் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு

  • Share on