• vilasalnews@gmail.com

வேம்பார் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான இளைஞர்கள் - சின்னப்பன் எம்எல்ஏ நேரில் ஆய்வு!

  • Share on

வேம்பார் ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உட்பட மாயமான இரண்டு இளைஞர்களை தேடுவதற்கான பணிகள் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த காந்தி என்பவரது மகன் ரஞ்சித்(18) கல்லூரி மாணவர் ஆவார். அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவரது மகன் காளிமுத்து (19) இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், நண்பர்களான இந்த இரு இளைஞர்களும் நேற்று ( 14.1.2021) மாலை வேம்பார் கடற்கரை அருகே இருக்கும் ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர்களது பெற்றோர்கள்  சூரங்குடி காவல் நிலையத்திற்கும், விளாத்திகுளம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து,  காவல்துறை, தீயணைப்பு துறை, முத்துக் குவியலில் ஈடுபடும் தொழிலாளர்கள் என அனைவரும் இளைஞர்களை  தேடும் பணியில்  ஈடுபட்டுள்ள உள்ளனர். இப்பணி குறித்து, ஆற்று பகுதியில்,  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் நேரில் சென்று பார்வையிட்டார்.


அவருடன் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், நெல்லை மண்டல வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குழு உறுப்பினர் செண்பகப் பெருமாள், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் ரமேஷ்,  முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் என்.கே.பி. வரதராஜ பெருமாள்,  ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கந்தவேல், பொதுக்குழு உறுப்பினர் கடற்கரை வேல், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலர் போடு சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • Share on

சூரியனை போற்றும் தினத்தில் இருந்து ஓர் புதிய உதயம் " விளாசல் "

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆட்சியர் ஆய்வு

  • Share on