தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் தினேஷ் ( 24 ) மெக்கானிக்கான இவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மீளவட்டான் செல்லும் சாலையில் பைக்கில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது வழியில் ஒருவர் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார். அந்த நபர் கத்தியை எடுத்து மைக்கேல் தினேஷ் உடலில் வைத்து அழுத்தி, நேதாஜி நகர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தயாராக இருந்த மேலும் 3 பேர் சேர்ந்து மைக்கேல் தினேஷ் தாக்கி அவரிடம் இருந்து ரூபாய் சுமார் 32 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் மைக்கேல் தினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட பண்டாரம் பட்டி, மீளவட்டான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.