தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் புதுமண தம்பதியருக்கு விழுப்புணர்வு கருத்தரங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி தலைமை தாங்கினார். இதில் 25 புதுமண தம்பதியர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார மருத்துவ அலுவலர் சுமதி ஐலின், வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர் ரஞ்சித் சாரா ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதியருக்கு தாய்சேய் நலம், மனநலன் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் வசந்தா, அமுதா, புஷ்பா, காமாட்சி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி நன்றி கூறினார்.