தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 7 மற்றும் 8 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. நுழைவுப் படிவங்களை அக்டோபர் 3 ம் தேதிக்குள் பூர்த்தி செய்து தர வேண்டும்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அணிகள் நுழைவுப் படிவங்களை தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ள மாவட்ட கைப்பந்து கழக அலுவலகத்தில் நாளை ( செப்டம்பர் 27ஆம் தேதி ) முதல் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவங்களை அக்டோபர் 3 ம் தேதி மாலை 5 மணிக்குள் அதே அலுவலகத்தில் கொடுத்து தங்களுடைய அணிவகுையை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சாம்பியன்ஷிப் பொறுப்பாளர்களான ஜெயபால் 9442055355, ஜூடு ரஞ்சித் 9443871330 ஆகியோரது எண்களில் தொடர்பு கொள்ளலாம். போட்டிகள் அனைத்தும் இந்திய கைப்பந்து சம்மேளத்தின் போட்டி விதிமுறைப்படி நடைபெறும்.
மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் முதல் இரண்டு அணிகள் மண்டல போட்டிகளில் பங்கேற்பர். மண்டல போட்டிகளில் வெற்றி பெறும் முதல் இரண்டு அணிகள் மாநிலப் போட்டிகளில் பங்கேற்பர். போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ரமேஷ் குமார், பொருளாளர் ஜெயின்ட் ரவி ராஜன் செய்து வருகின்றனர்.