• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் நகராட்சியில் லாரியின் டயர்கள் திருட்டு

  • Share on

திருச்செந்தூர் நகராட்சியில் குப்பை அள்ளும் லாரியின் பின்பக்க இரு டயர்களை டிஸ்க்கோடு திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு மூன்று மினி லாரிகள், நான்கு லோடு ஆட்டோக்கள் உள்ளது. இந்த மினி லாரிகள், லோடு ஆட்டோக்களை பணி முடிந்த பின் நகராட்சி எதிர்ப்புறம் உள்ள கலையரங்கம் பகுதியில் நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குப்பை அள்ளும் வாகனங்களை நிறுத்திவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். 

இதனையடுத்து, நேற்று காலை பணியாளர்கள் வந்து பார்த்தபோது, மினி லாரியின் பின்பக்க இரு டயர்கள் டிஸ்க்கோடு திருடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் கற்களை அடுக்கி வைத்து விட்டு சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 50,000 ஆகும். இதுகுறித்து நகராட்சி சார்பில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Share on

வல்ல நாட்டில் மான்கள் சரணாலயத்தில் வெளிமான்களுக்கு குடிநீர் கிடைக்க புதிய திட்டம்

தூத்துக்குடி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் - அக்., 3 ம் தேதிக்குள் அணிகள் விண்ணப்பிக்க அழைப்பு

  • Share on