தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாட்டில் வெளிமான்கள் சரணாலயம் உள்ளது.
கோடைகாலத்தில் வெளிமான்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மான்கள் அதிகமாக வந்து செல்லும் மூன்று இடங்களில் சுமார் 600 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, சோலார் மூலம் இயங்கும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்று மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறை அமைத்து தொட்டியில் தண்ணீர் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொட்டியில் உள்ள தண்ணீரை மான்கள் குடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை நெல்லை மண்டல வனப் பாதுகாவலர் மாரியப்பன் ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் விவரத்தை தூத்துக்குடி மாவட்ட வன அதிகாரி மகேந்திரன் எடுத்து கூறினார். மான்களுக்கு கோடைகாலத்தில் சிறப்பாக குடிநீர் தேவையை நிறைவேற்றி இருப்பதாக வனப் பாதுகாவலர், தூத்துக்குடி வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்தார். ஸ்ரீவைகுண்டம் ரேஞ்சர் பிருந்தா மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
வல்லநாடு வெளிமாண்கள் சரணாலயத்தில் சுமார் ரூபாய் 50 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் நடந்துள்ளது. மான்களுக்கு குடிநீர் வசதி தவிர தடுப்பு அணைகள், வாட்சிங் டவர், சுற்றுச்சுவர் வேலி பணிகள் போன்றவை நடந்துள்ளது. இந்த பணிகளையும் வனப் பாதுகாவலர் ஆய்வு செய்தார்.