• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அனல் நிலையத்தில் 2 யூனிட் நிறுத்தம்

  • Share on

தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டிகளில் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஒரு யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகமாக உள்ளது. இது தவிர சோலார் உள்ளிட்டவைகள் மூலமாகவும் மின் உற்பத்தி அதிகமாக கிடைத்து வருகிறது. காற்றாலை கை கொடுத்து வருவதால், தூத்துக்குடி அனல் நிலையத்தில் 2 யூனிட்களில் மின் நிறுத்தம் செய்யுமாறு மின்துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அனல் நிலையத்தில் 1, 3 ஆகிய இரண்டு யூனிட் களில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 2, 4, 5 ஆகிய யூனிட்களில் மட்டும் 630 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. மின்துறை உத்தரவு வந்தவுடன் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக அனல் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வல்ல நாட்டில் மான்கள் சரணாலயத்தில் வெளிமான்களுக்கு குடிநீர் கிடைக்க புதிய திட்டம்

  • Share on